Monday, March 5, 2012

gfsgdsgh

Monday, January 23, 2012

குட் மோர்னிங்

முற்றுபெறாத முத்த பணிவிடை செய்வதே உன் உதடுகளின் அடிமையான என் உதடுகளின் - முதற் கடமை .


Thursday, January 19, 2012

மழலையின் மழைகள்

நேற்று பெய்ந்த மழை - "தண்ணி நூல்"
இன்று பெய்யும் மழை - "டம் டம்"
நாளை பெய்யும் மழை - "rain" ன்னு
சொல்லற பூஜ்ஜி பாப்பா.

Sunday, January 8, 2012

once more words

Englandல் நீ பிறந்திருந்து -வீரபாண்டிய கட்டபொம்மானிடம்
ஜாங்ஷுன் துரைக்கு பதிலாய் - நீ
"வரி" கேட்யிருந்தால்
நிச்சயம் தந்திருப்பன்
அவனது காதலை கவிதை "வரி"களாக்கி ....
கையை கிள்ளி பார்த்து தெரிந்து கொண்டேன் - இது கனவுயில்லை
கோயிலில் கண்டது கடவுள் இல்லை - தேவதை
அது முதல் என் மனதில் சிறு - சித்ரவதை
ஆம் நீ அழகிய சித்திரங்களின் - விதை
எப்போது என் மனதில் துவினாய் - அதை
மனதில் கலந்து உதிற மறுத்து உலா வருகிறது - என் இதயத்தில் .



கிணற்றில் உன் எச்சசையை துப்பிவிட்டு போடி
பாவம் இவர்களுக்கு குடிக்க நல்ல தண்ணி இல்லையாம்.





Friday, February 25, 2011

உலக கோப்பை கிரிகெட்

Monday, November 30, 2009

எஸ்எம்எஸ் கட்டணங்கள் 99 சதவிகிதம் குறைப்பு!

டெல்லி: எஸ்எம்எஸ் கட்டணங்கள் கிட்டத்தட்ட 99 சதவிகிதம் அளவு குறைக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக ரிலையன்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு எஸ்எம்எஸ்ஸுக்கு 1 பைசா மட்டுமே என்ற திட்டத்தை அறிவித்துள்ளது.

மொபைல் சர்வீஸ் நிறுவனங்களில் அழைப்புக் கட்டணத்தை விட அதிக காஸ்ட்லியானதாக இருந்தது எஸ்எம்எஸ்தான். ஆனால் இந்த எஸ்எம்எஸ் அனுப்ப 1 KBக்கும் குறைந்த அலைவரிசை இருந்தாலே போதுமாம். இதற்கான கட்டணம் ஒரு பைசாவுக்கும் குறைவுதான். ஆனால் பல நிறுவனங்கள் இன்றைக்கும் 50 பைசா முதல் 1 ரூபாய் வரை எஸ்எம்எஸ் கட்டணமாக வசூலித்துக் கொண்டு வருகின்றன.

இந்த உண்மையை பத்திரிகைகள் சமீபத்தில் வெளிக் கொணர்ந்தன. இதனால் தொலைத் தொடர்பு ஆணையம் ட்ராய், 'பிஎஸ்என்எல் உள்ளிட்ட நிறுவனங்கள் எஸ்எம்எஸ் கட்டணத்தை அதிகளவு நிர்ணயிக்கப்பட்டிருப்பது உண்மைதான். விரைவில் குறைத்துவிடுவோம்' என்று சமாளித்திருந்தது.

ஆனால் மக்களுக்கு உண்மை தெரிந்து கடும் கோபத்திலிருந்தனர். இந்த சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளத் திட்டமிட்ட ரிலையன்ஸ், நேற்று எஸ்எம்எஸ் குறைப்பு அறிவிப்பை வெளியிட்டுவிட்டது.

இந்த அறிவிப்பின்படி இனி 1 எஸ்எம்எஸ் 1 பைசா மட்டுமே. ஒரு நாள் முழுக்க எஸ்எம்எஸ் அனுப்பினால் ரூ. 1 செலுத்தினால் போதும். எத்தனை எஸ்எம்எஸ் வேண்டுமானாலும் அனுப்பித் தள்ளலாம். ஒரு மாதம் முழுக்க எல்லையில்லை எஸ்எம்எஸ் அனுப்ப ரூ 11 செலுத்தினால் போதுமாம்.

பார்தி ஏர்டெல், பிஎஸ்என்எல், வோடபோனும் இப்போது எஸ்எம்எஸ் கட்டண யுத்தத்தில் களமிறங்குகின்றன.

Saturday, November 21, 2009

செல்போன் எண் மாற்றாமல் வேறு நிறுவனத்துக்கு மாறலாம் பதிவு செய்த நாள்

ஒரு செல்போன் நிறுவனத்தின் சேவை திருப்தி அளிக்கவில்லை என்றால், செல்போன் எண்ணை மாற்றாமலே ரூ.19 மட்டுமே செலுத்தி வேறு நிறுவனத்தின் சேவையைப் பெற முடியும். இந்த வசதி டிசம்பர் 31 முதல் நடைமுறைக்கு வரும் என டிராய் அறிவித்துள்ளது.
இந்த வசதியை கடந்த அக்டோபர் மாதத்தில் அறிமுகப்படுத்த தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) திட்டமிட்டி ருந்தது. அதற்கான பணிகள் நிறைவேறாத காரணத்தால் தாமதமானது.

இப்போது உள்கட்டமைப்புப் பணிகளை இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, குஜராத் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட ÔஏÕ பிரிவு வட்டங்களில் வரும் டிசம்பர் 31ம் தேதி இந்த முறை நடைமுறைக்கு வரும். நாட்டின் பிற பகுதிகளில் இது அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் நடைமுறைக்கு வரும் என டிராய் தெரிவித்துள்ளது.

வேறு நிறுவன சேவைக்கு மாற விரும்பும் வாடிக்கையாளர்கள் தாங்கள் இணைப்பு பெற்றுள்ள நிறுவனத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும். கோரிக்கை பெறப்பட்ட நான்கு நாட்களுக்குள் அவர்கள் விரும்பும் நிறுவன சேவைக்கு மாற்றித் தரப்படும். இதற்கு அதிகபட்சமாக ரூ.19 கட்டணம் வசூலிக்கப்படும்.
எம்என்பி இன்டர்கனெக்ஷன் சொலூஷன்ஸ்,
சினிவர்ஸ் டெக்னாலஜிஸ் ஆகிய இரு நிறுவனங்கள் மொபைல் நம்பர் போர்ட்டபிளிட்டி (எம்என்பி) எனப்படும் சேவை நிறுவனங்களை மாற்றித் தருவதற்கான பணிகளை மேற்கொள்ளும். இவ்வாறு ஒவ்வொரு முறையும் மாற்றித் தரும்போது, வாடிக்கையாளரிடமிருந்து ரூ.75 முதல் ரூ.200 வரை வசூலிக்கும்ÕÕ என டிராய் தெரிவித்துள்ளது. செல்போன் நிறுவனங்கள் ஏற்கனவே வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்வதற்காக கட்டணப் போட்டியில் ஈடுபட்டுள்ள நிலையில், இந்த முறை அமலுக்கு வந்தால் மேலும் போட்டி கடுமையாகும்.