Saturday, November 21, 2009

செல்போன் எண் மாற்றாமல் வேறு நிறுவனத்துக்கு மாறலாம் பதிவு செய்த நாள்

ஒரு செல்போன் நிறுவனத்தின் சேவை திருப்தி அளிக்கவில்லை என்றால், செல்போன் எண்ணை மாற்றாமலே ரூ.19 மட்டுமே செலுத்தி வேறு நிறுவனத்தின் சேவையைப் பெற முடியும். இந்த வசதி டிசம்பர் 31 முதல் நடைமுறைக்கு வரும் என டிராய் அறிவித்துள்ளது.
இந்த வசதியை கடந்த அக்டோபர் மாதத்தில் அறிமுகப்படுத்த தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) திட்டமிட்டி ருந்தது. அதற்கான பணிகள் நிறைவேறாத காரணத்தால் தாமதமானது.

இப்போது உள்கட்டமைப்புப் பணிகளை இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, குஜராத் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட ÔஏÕ பிரிவு வட்டங்களில் வரும் டிசம்பர் 31ம் தேதி இந்த முறை நடைமுறைக்கு வரும். நாட்டின் பிற பகுதிகளில் இது அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் நடைமுறைக்கு வரும் என டிராய் தெரிவித்துள்ளது.

வேறு நிறுவன சேவைக்கு மாற விரும்பும் வாடிக்கையாளர்கள் தாங்கள் இணைப்பு பெற்றுள்ள நிறுவனத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும். கோரிக்கை பெறப்பட்ட நான்கு நாட்களுக்குள் அவர்கள் விரும்பும் நிறுவன சேவைக்கு மாற்றித் தரப்படும். இதற்கு அதிகபட்சமாக ரூ.19 கட்டணம் வசூலிக்கப்படும்.
எம்என்பி இன்டர்கனெக்ஷன் சொலூஷன்ஸ்,
சினிவர்ஸ் டெக்னாலஜிஸ் ஆகிய இரு நிறுவனங்கள் மொபைல் நம்பர் போர்ட்டபிளிட்டி (எம்என்பி) எனப்படும் சேவை நிறுவனங்களை மாற்றித் தருவதற்கான பணிகளை மேற்கொள்ளும். இவ்வாறு ஒவ்வொரு முறையும் மாற்றித் தரும்போது, வாடிக்கையாளரிடமிருந்து ரூ.75 முதல் ரூ.200 வரை வசூலிக்கும்ÕÕ என டிராய் தெரிவித்துள்ளது. செல்போன் நிறுவனங்கள் ஏற்கனவே வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்வதற்காக கட்டணப் போட்டியில் ஈடுபட்டுள்ள நிலையில், இந்த முறை அமலுக்கு வந்தால் மேலும் போட்டி கடுமையாகும்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்