ஆபாச இணைய தளங்களை சிறுவர்கள் பார்க்கா வண்ணம் தடுக்க ஒரு புதிய யோசனை வடிவம் பெற்று வருகிறது. அதாவது .com, .net, .org என்று இருப்பது போல .xxx என்ற களப்பெயரினை உருவாக்க ப்ளோரிடாவில் இருந்து ஒருவர் விண்ணப்பத்திருப்பதை அடுத்து இணையதளங்கள் பெயரிடலுக்கான சர்வதேச அதிகாரபூர்வ அமைப்பான ICANN இந்த விஷயத்தை ஆலோசித்து வருகிறது.
அதாவது ஆபாச தளங்களை உருவாக்குவோர் தங்கள் தளங்களின் பெயர் விரிவை .xxx என்று அமைத்து கொள்ளும் பட்சத்தில் தங்கள் குழந்தைகள் இந்த இணைய தளங்களை பார்வையிடுவதை மென்பொருள் மூலமாக பெற்றோர்கள் தடுக்க முடியும்.
இருப்பினும் இது தளங்களுக்கு பெயரிட விரும்புவோரே முடிவு செய்யக் கூடிய விஷயமாகும். அதாவது .xxx என்ற கள விரிவுடன் இருக்கும் இணையதளங்களில் ஆபாசம் இருக்கும் என்று சொல்ல முடியுமே தவிர அந்த விரிவு இல்லாத தளங்களில் ஆபாசமே இருக்காது என்ற உத்தரவாதத்தினை நம்மால் கொடுக்க முடியாது. எனினும் இந்த யோசனை ஆபாச இணைய தளங்களில் இருந்து சிறுவரை காப்பாற்ற வேண்டும் என்று குரல் கொடுக்கும் ஏராளமான பெற்றோர்களுக்கு ஒரு சரியான திசையிலான நம்பிக்கையூட்டும் செய்தியாகும்.
Wednesday, October 7, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்